சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழ்நாடுசென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. நள்ளிரவு 12.15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து அதிகாலை கோயில் நடை திறந்த பின் சோதனை செய்ததில் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.