காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!
தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது.
தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது.
இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நவ. 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்று இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்திற்கு ஜனவரியில் 2.76 டிஎம்சி மற்றும் பிப்ரவரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்க வேண்டும். நிகழ் ஜனவரியில் நாளொன்றுக்கு விநாடிக்கு சுமாா் 600 கன அடி வீதம் தண்ணீா் வரும் நிலையில், ஒழுங்காற்றுக் குழு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை விரைவாக வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு (சிடபிள்யுஆர்சி) பரிந்துரைத்தது.
இதையும் படிக்க: நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்!
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.