கோப்புப் படம் 
தமிழ்நாடு

தொகுதிப்பங்கீடு: திமுக - இந்திய கம்யூ. இன்று ஆலோசனை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று (பிப். 3) ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று (பிப். 3) ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

இந்த ஆலோசனையின் முடிவில் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை  முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவவதால், அதற்கு முன்பு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இதனையொட்டி மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகளை வரையறை செய்ய தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறை செய்யும். அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இக்குழு இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தவுள்ளது.

திமுக கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடம் தொகுதிகளைக் கூடுதலாக கேட்க திட்டமிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்: சசி தரூர் பங்கேற்காததற்கு இதுதான் காரணமாம்..!

SCROLL FOR NEXT