தமிழ்நாடு

பிப். 11 - ஜெ.பி. நட்டா தலைமையில் பொதுக்கூட்டம்!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்கவுள்ளார். 

DIN

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்கவுள்ளார். 

காலையில் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், பிற்பகல் சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தியாகராய நகரிலும் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை நடத்தி வரும் நடைப்பயணம் கொங்கு மண்டலத்தில் நிறைவு பெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி வருகிறாா். இதில் பங்கேற்க பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 11ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அதில், ஜெ.பி. நட்டா பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சென்னை வரும் அவர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலும், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தியாகராய நகரில் பிற்பகலிலும் மக்களை சந்திக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT