முகப்பு
தமிழ்நாடு

சென்னை: 7 நாள்களில் 160  கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

சென்னையில் 7 நாள்களில் 160  கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னையில் 7 நாள்களில் 160  கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர், உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29-01-2024 ஆம் தேதி முதல் 4-02-2024 வரையிலான  7 நாள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 160 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் ரூ.22 ஆயிரம், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →