பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள்: அண்ணாமலை
பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"வரும் பிப். 11 ஆம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் 200-வது தொகுதி சென்னைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து, பிப். 11 ஆம் தேதி மாலை மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பிப். 25 ஆம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதையும் படிக்க: சஞ்சய் சிங் பதவியேற்புக்கு மாநிலங்களவைத் தலைவர் மறுப்பு!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக கட்சி அதிகமான இடங்களில் முதலிடத்தையும், சில இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடிக்கும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பங்காளிகள் எங்களை பகையாளிகளாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல" எனத் தெரிவித்தார்.