தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை பிப்.19-க்கு ஒத்திவைப்பு!

DIN

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை பிப்ரவரி 19-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இந்த நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி பிப்.12-ம் தேதி ராஜிநாமா செய்துள்ளார்.

தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்நாட்டில் உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஜாபா் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

கீழப்பாவூரில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: மே 28இல் தொடக்கம்

SCROLL FOR NEXT