முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

இன்றும், நாளையும் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிப் 15, 16 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதேசமயம் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை ... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →