தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்குகள் முடக்கம்: உயர்கல்வித் துறை விளக்கம்

DIN

சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமானவரித் துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் 2017-18 முதல் 2022-21 வரை ரூ. 424 கோடி வரி நிலுவைத் தொகையை கட்டாததால் வருமானவரித் துறை கணக்கை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமானவரித் துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்படாததால் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதி கடிதம்

இந்த நிலையில், வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த வருமானவரித்துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். கால நீட்டிப்பு கோரி வருமானவரித் துறையிடம் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT