தமிழ்நாடு

பைபர் படகில் 364 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

பைபர் படகில் 364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தனிப்படை போலீஸார் வேட்டைகாரனிருப்பு அருகே நாலுவேதபதி, கவுண்டர் தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பைபர் படகு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சா பதுக்கி வைத்திருந்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சத்தியசீலன்(37), நாலுவேதபதியைச் சேர்ந்த மகேந்திரன்(32), புஷ்வனத்தை சேர்ந்த சுகுமார்(29) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 364 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைபர் படகு பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT