தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகள்!

DIN

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மதுரைக்காக மட்டும் 20 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று (பிப். 19) தெரிவித்துள்ளார்.

தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழில்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ளதாகவும் தமிழக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மதுரைக்கான அறிவிப்புகள்:

  • மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு

  • கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம்.

  • குமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, கோவை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்.

  • திருமங்கலம் - ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • மதுரை, சென்னை, கோவையில் பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதிகள். அதற்காக ரூ.26 கோடி ஒதுக்கீடு.

  • மதுரை, சென்னை, சேலம், கோவை, திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி.

  • அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமைத் திட்டம்.

  • மதுரை, சேலம் மாநகராட்சிகளில் 2024 - 2025ம் நிதியாண்டில் 24 மணிநேரம் தடையற்ற குடிநீர்த் திட்டம்.

  • மதுரையில் புதிய கல்லூரி மாணவர் விடுதி

  • திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கீடு.

  • கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 20 அறிவிப்புகள் மதுரையில் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

ஊரக வளா்ச்சித் துறையில் 6 பேருக்கு பணி ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

பிரதமரும் ஒடிஸா முதல்வரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: காங்கிரஸ்

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

SCROLL FOR NEXT