தமிழ்நாடு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா: 4454 இலங்கையர்கள் பங்கேற்பு; இந்தியர்கள் புறக்கணிப்பு

DIN

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றிைணைந்து கலந்துகொள்ளும் திருவிழாவான கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழாவில் 4454 இலங்கை பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்தியர்கள் புறக்கணித்தனர்.

ஆண்டுதோறும் இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பிப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா வியாழக்கிழமை மாலை (பிப். 23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில், சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.

ஆண்டு திருவிழா திருப்பலி நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாரும் பங்கேற்கவில்லை.

இந்த திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் அதிபரின் செயலாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT