முகப்பு
தமிழ்நாடு

விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்: அண்ணாமலை

விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

சென்னை: விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான விஜயதரணி, புது தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் அவரது தலைமையை ஏற்று பாஜகவை மேலும் வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜயதரணி தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதாவது, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதரணி, பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, தில்லியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர்

சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சகோதரி விஜயதரணிியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.