தமிழ்நாடு

விமான நிலையத்தில் ரூ. 1. 57 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

DIN

விக்கி ஜகதீஷ் பாட்டியா என்ற பயணியின் கைப் பைகளை பாதுகாப்புப் பரிசோதனையின் போது, ​​மும்பைக்குச் சென்ற சிஐஎஸ்எஃப் பணியாளர்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பயணி தனது கைப்பையை பரிசோதனைக்கு வைத்தபோது, ​​உதவி காவல் ஆய்வாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர், பயணியை உடல் பரிசோதனைக்கு அனுப்பினார்.

விரிவான சோதனையில், ​​மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சி வருமான வரி புலனாய்வு மற்றும் விமான புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கரன்சியின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

SCROLL FOR NEXT