கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

இது நினைவிடமல்ல! கருணாநிதியின் தாஜ்மஹால்: ரஜினிகாந்த்

கருணாநிதியின் நினைவிடம் தாஜ்மஹால் போன்றது என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

DIN

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால் போன்றது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கருணாநிதி நினைவிடத்தை சுற்றிப்பார்க்கும் ரஜினிகாந்த்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''கருணாநிதி நினைவிடம் மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் அற்புதமாக உள்ளது. கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு அருமையாக உள்ளது'' என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT