தமிழகத்தின் காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத் துறையின் தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் விடியோக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
இவர் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத் துறையின் தலைவராக ஆனந்த் சீனிவாசனை நியமித்து அக்கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.