கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாஜகவில் நாளை இணைய உள்ளவர்கள் யார்? எல். முருகன் ட்விஸ்ட்!

பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

DIN

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை(பிப். 27) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக அரசியலில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவிற்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக இது இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பேராதரவும், அன்பும் கிடைத்துள்ளது.

பாஜக அரசின் கடந்த பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் இயலாமையையும் ஊழல்களையும் மக்களிடத்தில் எடுத்து கூறியுள்ளோம். இதன் நிறைவு விழா பிரதமர் தலைமையில் பல்லடத்தில் நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் போதை பொருள்கள் பழக்கம் மிக அதிகமாகியுள்ளது. குறிப்பாக கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. சுமார் ரூ. 3000 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தலில் திமுக நிர்வாகி ஈடுபட்டிருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் மற்றும் பலர் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT