தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 137 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம், பொடாவூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.

இந்நிலையில் இதற்கான நில எடுப்புப் பணி முதல் கட்டமாக பொடவூர் கிராமத்தில் சுமார் 122 நபர்களுடைய நிலத்தினை கையகப்படுத்தும் நோக்கில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் 30 நாள்களுக்குள் இதற்கான மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் டிராக்டர் பேரணியாக சென்று நில எடுப்பு அலுவலக திறப்பு விழாவை தவிர்க்க கோரி முற்றுகையிட முயன்றனர்.

இந்நிகழ்வினை ஒட்டி இரண்டு மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பேரணி செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனைக் கண்டித்து தங்க வைக்கப்பட்ட இடத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஈடுபட்ட நிலையில், இருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 137 நபர்கள் மீது , சட்ட விரோதமாக கூடுதல், அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது , அரசு ஊழியரின் உத்தரவை மீறுவது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

SCROLL FOR NEXT