முகப்பு
தமிழ்நாடு

புத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்து நல்ல செய்தி சொன்ன காவல்துறை

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

புத்தாண்டுக் கொண்டாட்டம் குறித்து நல்ல செய்தி சொன்ன காவல்துறை

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:


சென்னை: டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுமார் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்துக் காவலர்களுக்கும் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும், சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் மிகவும் உற்சாகத்துடனம், வழக்கமான மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. முன்னெச்சரிக்கை மற்றும் பலத்த பாதுகாப்பு காரணமாக, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. முன்னதாக, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டிருந்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.

நேற்று இரவு 7 மணியில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணித்தனர். 

சென்னை மாநகரில் மட்டும் சுமார் 18ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →