தமிழ்நாடு

ஜன. 4, 5ல் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஜன.4,5ல் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் ஜன.4,5ல் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து இன்று வெளியிட்ட தகவலில், 

நேற்று 01.01.24 தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய  காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று(02.01.24) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று(ஜன.02) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

ஜன.4,5 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 

மீனவர்கள் இன்று(ஜன.02) குமரிக்குடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

SCROLL FOR NEXT