தமிழ்நாடு

நாமக்கல் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை!

நாமக்கல்லில் தனியார் ஒப்பந்ததாரரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் ஒப்பந்ததாரரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்லில் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அரசு சார்ந்த கட்டடங்கள் கட்டுவதில் முன்னிலை வகித்து வருகின்றனர். நாமக்கல் அழகு நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் வந்தனர்.

அவர்களுடன் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை காவல் துறையினர் வந்திருந்தனர். அதிகாரிகள், வீடு மற்றும் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். வீட்டில் இருந்த காரை முழுமையாக சோதனை செய்தனர். இந்த அமலாக்கத்துறையினரின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT