அண்ணாமலை 
தமிழ்நாடு

பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது; மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும்: அண்ணாமலை

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

DIN

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தை புதன்கிழமை தொடங்கினார். முன்னதாக சேலம் மக்களவைத் தொகுதி பாஜக அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். 

பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் ஆத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சாதிப்பெயரை குறிப்பிட்டு இருப்பது வருங்காலத்தில் திருத்திக் கொள்ளப்படும். 

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ஆன்லைனில் பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில்  ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் வழங்க அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பில் நாடகமாடி மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்குவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! மக்கள் மலர் தூவி பிரியாவிடை!

கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

பார்சிலோனா அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான 8 அணிகள்!

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

SCROLL FOR NEXT