தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடி ஏரி மற்றும் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்குள் நீர் வரத்து வியாழக்கிழமை ஒரே நாளில் 891 கன அடியாக அதிகரித்தது. 

முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை. அன்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை முதல் தேக்கடி ஏரியில் 71.12 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணையில் 49.0 மி.மீ., மழையும் பெய்தது. அதனால் வியாழக்கிழமை நிலவரப்படி அணைக்குள் நீர் வரத்து 1,284.31 கன அடியாக வந்தது. அதாவது ஒரே நாளில் 891 கன அடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மின்சார உற்பத்தி

முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து 11-ஆவது நாளாக தமிழக பகுதிக்கு தண்ணீர் 1,867 கன அடியாக வெளியேற்றப்படுவதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளும் முழுமையாக இயங்குகிறது. அதன் மூலம் முழு கெள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை அணை நிலவரம் 

நீர்மட்டம் 136.95 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 6,357 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,284.31 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT