தமிழ்நாடு

வளசரவாக்கத்தில் ரூ. 42 கோடியில் பாலம்:அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

DIN

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்தில் ரூ. 42.71 கோடி மதிப்பில் கூவம் ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில், ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என்.நேரு, பாலப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து யூனியன் சாலையில் இணைக்கும் வகையில் ரூ. 31.65 கோடி மதிப்பில் இருவழி பாலப் பணிகளைத் விரைவில் முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மதுரவாயிலிருந்து அடையாளம்பட்டு செல்லும் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சேதமடைந்த தரைப்பாலத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புத்தூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் கா.கணபதி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT