முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →