கௌதம் அதானி 
தமிழ்நாடு

அதானி குழுமம் ரூ. 42,768 கோடி முதலீடு: 10,300 பேருக்கு வேலை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் ரூ. 42,768 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 42,768 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் ரூ.6,64,180 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 

இதில், அதானி குழுமத்தின் 4 நிறுவனங்கள் ரூ. 42,768 கோடிக்கு முதலீடு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் ரூ. 24,500 கோடி(4,000 வேலைவாய்ப்புகள்), அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன ரூ. 3,500 கோடி(5,000 வேலைவாய்ப்புகள்), அதானி கனெக்ஸ் ரூ. 13,200 கோடி(1,000 வேலைவாய்ப்புகள்) மற்றும் அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் ரூ. 1,568 கோடிக்கு(300 வேலைவாய்ப்புகள்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

நாளைய மின்தடை: ஈங்கூா், தண்ணீா்பந்தல்

தில்லி காா் வெடிப்பு வழக்கில் தொடா்புடையவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்: தில்லி நீதிமன்றம் உத்தரவு

அந்தியூரில் கால்நடை மருத்துவ முகாம்

அந்தியூரில் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT