தமிழ்நாடு

சென்னையில் கனமழை பெய்யும்.. அதி கனமழையல்ல

DIN


சென்னை: சென்னையில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தெற்கு சென்னை முதல் மகாபலிபுரம் வரையிலான பகுதிகளுக்கு கீழே மழை மேகங்கள் நின்றுவிட்டன. ஆனால், டெல்டா முதல் செங்கல்பட்டு வரை கனமழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளான திருவாரூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் 200 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. எப்படியாகினும், சென்னைக்கு அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது நிகழாது. சென்னையில் இன்று சமாளிக்கக் கூடிய அளவில்தான் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார்.

மழை மேகக் கூட்டங்கள் டெல்டா முதல் புதுச்சேரி வரை பரவியுள்ளன. விழுப்புரம் முதல் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகள் வரை தொடர்ந்து இன்று கனமழை பெய்துகொண்டே இருக்கும். தெற்கு சென்னையின் புறநகர்ப் பகுதிகள் முதல் கிழக்குக் கடற்கரை சாலை வரை ஆங்காங்கே கனமழை பெய்யலாம். ஆனால், ஒட்டு மொத்த சென்னை நகரும் கனமழைக்கான மேகக் கூட்டங்களை இழந்துவிட்டது.  இந்த கனமழை பெய்யும் மேகக் கூட்டங்கள் எல்லாம் டெல்டா பகுதிகளிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வரை பரவியிருக்கிறது. அடுத்த சில மணிநேரங்களில் இது செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை புறநகர் பகுதிகளுக்கு சிறிது சிறிதாக இடம்பெயரலாம்.
 

சென்னையில் இன்று என்ன நடக்கும்?
எனினும், சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை எடுத்துக் கொண்டால், சென்னையில் சாதாரண சமாளிக்கக்கூடிய கனமழை பெய்யும். மிக அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகளிலும், கள்ளக்குறிச்சி, கடலூரிலும் இன்றும் கனமழை பெய்யும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

SCROLL FOR NEXT