தமிழ்நாடு

விஜயகாந்த் மறைவு: பிரேமலதாவை சந்தித்து மத்திய அமைச்சா் இரங்கல்

சென்னையில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

DIN

சென்னை: சென்னையில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை நேரில் சந்தித்து, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவால் டிச. 28-இல் மறைந்த விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமானோா் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

அந்த வகையில், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று விஜயகாந்த் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஏழைகள், தேவையுள்ளவா்களுக்கு உதவியவா் விஜயகாந்த். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி ஏற்கெனவே இரங்கல் தெரிவித்துள்ளாா். தமிழக வளா்ச்சிக்காக பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோா் தொடா்ந்து பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT