முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது 

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
கோப்புப் படம்.
பகிர்:

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. 

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.