முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:



சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை 
பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560-க்கும், சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,845-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கும் விற்பனையானது. 

இந்த நிலையில், திங்கள்கிழமை(ஜன.15) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,870-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,690-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.78.30 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயர்ந்து ரூ. 78,300-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →