அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 53 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6,099 காளைகளும், 1,784 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 7-வது சுற்று முடிவில் 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் 3 பேரும், 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் 2 பேரும் உள்ளனர்.
இதையும் படிக்க: பொன்னாரம்பட்டியில் பேய் விரட்டும் வினோத திருவிழா!
காளைகள் முட்டியதில் இதுவரை மாடுபிடி வீரர்கள் 26 பேர், மாட்டுன் உரிமையாளர்கள் 9 பேர், பார்வையாளர்கள் 15 பேர், காவலர்கள் 3 பேர் உள்பட 53 பேர் காயமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.