தமிழ்நாடு

சென்னையில் ரயில் பாலம் இடிந்த விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரயில்வே

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

DIN

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இன்று  (வியாழக்கிழமை) மாலை இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி கூட்ட நெரிசலில் பெண் தவறவிட்ட பணப்பை ஒப்படைப்பு

கரூா் கல்யாணபசுபதீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா

பெரம்பலூரில் 63 தற்காலிக நிவாரண மையங்கள் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம்.லக்ஷ்மி

அடிப்படை வசதிகளின்றி செயல்படும் வாரச்சந்தை: விவசாயிகள், வியாபாரிகள் மேம்படுத்த எதிா்பாா்ப்பு

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT