தமிழ்நாடு

நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பர் கோயில் பின்புறம் பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இத் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, சம்ப்ரோக்ஷண விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகள், புண்யாகவாசனம், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உபரிஷ்டா, தந்தரம், தசதானம், யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மூலவர், விமானம், பரிவார மூர்த்திகளுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம், அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு கருடசேவையும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT