தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம் 
தமிழ்நாடு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கியது.

DIN

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2024 இன்று (ஜன. 24) தொடங்கியது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு ஜனவரி 24, 25(புதன், வியாழன்) ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.

கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றி வருகிறார்.

இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை சீசன்... ஜாஸ்மின் வாலியா!

கலந்துகட்டிய பொருத்தம்... கரீனா கபூர்!

ஸ்பேஸில் இருந்து வருவது எளிது.. ஆனால், பெங்களூருவில்..! சுபான்ஷு சுக்லா ‘கலகல’ பேச்சு!

மலர்ந்த முகமே... ஷ்ரவந்தி சொகரபு!

மகாலட்சுமியின் உற்சாகம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

SCROLL FOR NEXT