கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி. முனுசாமி 
தமிழ்நாடு

ராமரை வைத்து அரசியல் செய்பவர்களை கடவுள் தண்டிப்பார்: கே.பி.முனுசாமி பேட்டி

ராமரை வைத்து அரசியல் செய்பவர்களை கடவுள் தண்டிப்பார் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

DIN



கிருஷ்ணகிரி: ராமரை வைத்து அரசியல் செய்பவர்களை கடவுள் தண்டிப்பார் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி புறநகர் கிளை பணிமனையில் அண்ணா தொழிற்சங்க அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் கே.பி.  முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர்  அனைவருக்கும்மான கடவுள். அவரை வைத்து அரசியல் செய்பவர்களை கடவுள் தண்டிப்பார். 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதனைக் கண்டித்து, பிப்ரவரி 1 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். தன்னுடைய ஆதாயத்திற்காக மோடியை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். பிரதமர் மோடி அவரை கண்டிக்க வேண்டும். நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு குறித்து  முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறாக பேசி வருகிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT