கோப்புப்படம் 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணை!

அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை (ஜன. 30)  சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை (ஜன. 30)  சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினா். அப்போது நீதிபதிகள், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே இரண்டுமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக கடந்த 12-ஆம் தேதி மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சா் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனுவில், ‘ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும்’ என முதன்மை அமா்வு நீதிமன்றம் கூறியது தவறு. ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதை சந்தா்ப்ப சூழ்நிலை மாறியதாக கருதுகிறோம்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

SCROLL FOR NEXT