ஏரிக்கரையை உடைத்து சென்னை - பெங்களூரு சாலைப் பணி! விவசாயிகள் அதிர்ச்சி!!
பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை உடைத்து பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடுஏரிக்கரையை உடைத்து சென்னை - பெங்களூரு சாலைப் பணி! விவசாயிகள் அதிர்ச்சி!!
பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை உடைத்து பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை உடைத்து பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலை போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பிரதான கிராமப்புறத்தை கடக்கும் பாதைகளில் உயர்மட்ட பாலம் மற்றும் ஏரி நடுவே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
இரண்டாவது கட்டமாக சாலை அமைக்கும் பணிக்கு ஆளுயரத்திற்கு மண்ணைக் கொட்டி நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்
இதில் காஞ்சிபுரம் - அரக்கோணம் மின்சார ரயில் கடக்கும் பாதை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்கு வழி சாலை கடக்கும் பாதைக்கு உயர்மட்ட பாலப் பணி நடந்து வருகிறது
இந்தப் பணிக்கு கோவிந்த வாடி ஏரிக்கரை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
எனவே சேதப்படுத்தி இருக்கும் ஏரிக்கரையை முறையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு யார் கரையை உடைத்தார்கள் என்பதை விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளார்.