தமிழ்நாடு

நீலகிரியில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு!

DIN

நீலகிரியில் இன்று உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 

ஜன.31 முதல் பிப். 2 வரை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

பிப்.03 முதல் பிப்.6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

உறைபனி எச்சரிக்கை

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘ஊபர்’ நிறுவனம்

வைகாசி மாதப் பலன்கள் - விருச்சிகம்

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

பிகார்: தேர்தல் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொலை

வைகாசி மாதப் பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT