முகப்பு
செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர்
தமிழ்நாடு

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னை: சந்தீப் ராய் ரத்தோர்

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது என்கிறார் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

தமிழ்நாடு

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னை: சந்தீப் ராய் ரத்தோர்

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது என்கிறார் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

Updated On : 6 ஜூலை, 2024 at 10:58 AM
செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர்
பகிர்:

சென்னை: இந்தியாவிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என தெரிவித்துள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள  சென்னை காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலை வழக்கு விசாரணை மற்றும் பின்னணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. இதனை நாங்கள் செல்லவில்லை ஆய்வில் சொல்லியுள்ளார்கள். கடந்த 6 மாதங்களில் கொலை குற்றங்களைப் பொறுத்தவரை, கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது குறைந்துள்ளது. கடந்த 2023ல் முதல் 6மாதங்களில் 63 கொலை நடைபெற்றுள்ளது. இவ்வாண்டு அது 58ஆக குறைந்துள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை பொதுமக்கள் பாதுகாப்பு காவல்துறைக்கு மிக முக்கியம். எப்போதும் பொதுமக்களுக்கு உதவியாக உள்ளோம். எந்தக் குற்றம் நடைபெற்றாலும் அதன் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக் குறித்து பேசிய சந்தீப் ராய் ரத்தோர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரியான விசாரணைக்கு பின் கூடுதல் விபரங்கள் தெரிவிக்கப்படும். குற்றவாளிகள் சரணடையவில்லை. முறையான, விரைவான விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் சரணடையவில்லை முறையான விரைவான விசாரணைக்கு பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →