தமிழ்நாடு

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையராக அருண் நியமனம்

சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அருண் நியமனம்

DIN

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக ஏ. அருண் நியமனம் செய்யப்பட்டு, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட நிலையில், சென்னையில் காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த பணியிட மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்திருக்கும் உத்தரவில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழக போலீஸ் அகாதமியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார்.

மேலும், ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், இதுவரை அருண் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT