கோப்புப்படம் 
தமிழ்நாடு

விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுவையில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை அருந்தியதாக முதல்கட்ட தகவல்.

DIN

விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 11 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்றுமுதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியில் ஆண்கள் குடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT