ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அண்ணாமலை மானநஷ்ட வழக்கு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிராக வழக்கு.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ரூ. ஒரு கோடி மான நஷ்ட தொகை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது:
Advertisement
Advertisement
“ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெறப்படும் மானநஷ்ட தொகையை கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
என்னை சின்னப் பையன் என்று கூறிய ஆர் எஸ் பாரதி இப்போது இந்த வழக்கின் மூலம் நான் யார் என்பதை புரிந்து கொள்வார். கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். நாய்கூட பிஏ படிக்கிறது என்று அவதூறாக அவர் பேசியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.” என்றார்.