முகப்பு
தமிழ்நாடு

கோவை - அபுதாபி: ஆக. 10 முதல் நேரடி விமான சேவை

வாரத்துக்கு மூன்று நாள்கள் நேரடி விமான சேவை அறிவிப்பு.

Updated On : 17 ஜூலை, 2024 at 7:38 AM
கோப்புப்படம்
பகிர்:

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் அதிகாலை 1 மணியளவில் புறப்படும் இண்டிகோ விமானம், காலை 6.30-க்கு கோவை வந்தடைகிறது. மறுமார்க்கமாக காலை 7.30 மணியளவில் புறப்பட்டு அபுதாபி சென்றடைகிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து இதுவரை துபை, சிங்கப்பூருக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அபுதாபிக்கு சேவை தொடங்கவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →