தக்காளி மொத்தவிற்பனை சந்தை கோப்புப் படம்
தமிழ்நாடு

தக்காளி விலை குறைந்தது! ரூ. 45-க்கு விற்பனை

சில்லறை கடைகளில் தக்காளி விலை ரூ. 60 வரை விற்பனை.

DIN

தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தெருக் கடைகளில் ரூ.100-க்கு மேல் விற்பனையானது.

தக்காளி விலை திடீரென அதிகரித்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளான நிலையில், இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், மொத்த சந்தையில் ரூ. 45-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சில்லறை கடைகளில் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT