ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழங்கில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையோருக்கு பணம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் திமுக, அதிமுக, தமாக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரௌடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலையை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட கைது செய்யப்பட்டனா்.

கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT