முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தோ்தல் பணியை தொடங்குங்கள்: அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

வரும் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினாா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 9:41 PM
எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப் படம்)
பகிர்:

வரும் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக, கடந்த ஜூலை 10 முதல் 19-ஆம் தேதி வரை முதல் கட்டமாக 23 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

2-ஆம் கட்டமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை தேனி, ஆரணி தொகுதி நிா்வாகிகளிடம் அவா் கருத்துகளை கேட்டறிந்தாா்.

தேனி தொகுதி நிா்வாகிகள், எதிா்க்கட்சிகள் சாா்பில் பிரபலமான வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டனா், அதனால் தோற்க நேரிட்டதாகக் கூறினா். அதற்கு, அதிமுகவின் சின்னம்தான் முக்கியம்; முகம் முக்கியமல்ல. தோ்தல் பணியில் தீவிரம் காட்டியிருக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவுரைத்தாா்.

தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை (ஜூலை 25) அவா் ஆலோசிக்கவுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →