முகப்பு
தமிழ்நாடு

"ரூ.10லட்சம் இழப்பீடு - அரசின் முடிவில் தலையிட முடியாது" - உயர்நீதிமன்றம்

கள்ளச் சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Updated On : 26 ஜூலை, 2024 at 10:57 AM
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
பகிர்:

கள்ளச் சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 67 பேர் அண்மையில் பலியாகினர். இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது, எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.