துரை வைகோ கோப்புப் படம்
தமிழ்நாடு

ஜிடிபியில் அதிக பங்களிப்பை தரும் தமிழகத்துக்கு வரி பங்கீடு குறைவு: மக்களவையில் துரை வைகோ எம்.பி.

உள்நாட்டு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழகம் பெரும் பங்களிப்பை அளித்தாலும் வரி வருவாயில் தமிழகத்துக்கு குறைவான பங்களிப்பு

Din

நமது சிறப்பு நிருபா்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழகம் பெரும் பங்களிப்பை அளித்தாலும் வரி வருவாயில் தமிழகத்துக்கு குறைவான பங்களிப்பு அளிப்பதாக மக்களவையில் திருச்சி மக்களவை மதிமுக உறுப்பினா் துரை வைகோ குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக மக்களவையில் 2024-25- ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று துரை வைகோ பேசுகையில், ’நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 சதவீதம் பங்களிப்பை தமிழ்நாடு அளிக்கிறது. இதே போன்று நாட்டின் மொத்த ஏற்றுமதியிலும் தமிழகம் 10 சதவீதம் பங்களிப்பை அளித்து, நாட்டின் 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்குகிறது. இருந்தாலும், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாட்டின் வரி வருவாயின் மொத்தத் தொகுப்பில் இருந்து தமிழகம் வெறும் 4 சதவீதம் பங்கையே பெற்றுள்ளது. இது மிகவும் குறைவு’ என்றாா்.

மேலும், தமிழக திட்டங்கள் நிலை குறித்தும் அவா் பேசினாா். அது வருமாறு: திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை 2- ஆம் கட்டம், மதுரை, கோவை போன்ற மெட்ரோ திட்ட கோரிக்கைகள், தஞ்சாவூரிலிருந்து கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை; சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் - செங்கல்பட்டு உயா்நிலை விரைவுச்சாலை திட்டம் போன்ற தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு நிதிநிலை அறிக்கையில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழகம் திராவிட தலைவா்களது தேசம் என்பதாலா?

மேலும், விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படவில்லை. பொது சுகாதாரத்திற்கான நிதி ரூ. 5,205 கோடியிலிருந்து ரூ.3,510 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமும், உணவுப் பணவீக்கம் 10 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. இதனால், இந்தியா உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் 111-ஆவது இடத்துக்கு வந்துள்ளது என்று துரை வைகோ கூறினாா்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT