அமைச்சர் கே.என்.நேரு. 
தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

DIN

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீரை அமைச்சர் திறந்துவைத்தார். நீரை திறப்பது குறித்து டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையும் நடத்தியிருந்தார்.

அப்போது, இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேட்டூர் அணையில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி முதல் நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.30 டி.எம்.சி யாகவும் உள்ளது. கர்நாடகத்திலுள்ள 4 முக்கிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வினாடிக்கு சுமார் 1.48 இலட்சம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால், இந்த நீர்வரத்து மேலும் மூன்று நாள்களுக்குத் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT