முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 50-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 30 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 29 ஜூலை, 2024 at 9:54 PM
கோப்புப் படம்.
பகிர்:

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 30 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஆக. 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.

இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, அவரது நீதிமன்றக் காவலை ஜூலை 30 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →